ஞாயிறு, 23 மார்ச், 2008

நலம் வாழ யார் பாடுவார்

நான் தேடியது கிடைத்தது என்று உவகை கொள்வாய்
நல்ல காலம் இதுவென்று மகிழ்ந்திருப்பாய் ஆனால்
நாட்கள் கடந்த பின்னே நட்பும் காதலாகும்
நன்று இதுவே பிறவி பயன் என்பாய்

நகைத்த நகையிங்கே மறையுமுன்னே ஊழ் வந்துசேர்ந்துவிடும்
நாடாறு மாதம் என்றால் காடாறு மாதம் உனக்கு
நல்ல அன்பும் நறுமண காதலும் தொலைந்து போகும்
நட்பு காதலாகி இப்போது கடமை மேலோங்கும்

உனக்கு மட்டும் உள்ளம் உருக்கால் செய்திருக்க வேண்டும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் உனக்கு
எப்போது வேண்டுமானாலும் எதுவும் மாறும் அதனால்
எதுவுமே நிரந்தரம் இல்லை வாழ்க்கை போல

இன்று இருப்போர் நாளை இல்லை இதய வார்த்தையும் மாறிப்போகும்
இயற்கை இதுதானோ இயல்பாய் கொள்வாயோ இரும்பாய் இருப்பாயோ
இருக்கும் காலம் எல்லாம் இதுவே விதித்திருக்கும் ஏற்றுக்கொள்
இதுவே இறைவன் சித்தமானால் இனிஎன்ன செய்வாய் நீயே

அன்பும் காதலும் அற்புத உணர்வுகள் ஆனால்
அடைவது அவைதனை ஆண்டவன் அருளால் அதிலும்
அரிது இரண்டும் அத்தனை எளியாதாய் எவருக்கும்
அமைவது இல்லை காணற்கரிய கணிபோருள்போல்


அலைந்து திரிந்து அடைந்த போதில் ஆறுதல் பெற்றாய்

அந்தோ! அடிக்கடி நேரும் சுழல் காற்றில் அலைக்கழிந்தாய்
அனைத்துக்கும் காரணம் நீயோ அன்றி ஆண்டவன் விளையாட்டோ
ஆறுதல் தேடி ஓடினாய் ஆனால் விடியல் வெகுதூரத்தில்

தேடும் பொருள் யாவும் தொலைந்து போகும் தெரிந்தும்
தெளிவில்லை நம் மனதில் தொடர்ந்து போவோம்
பசும் சோலை என்பது பாலைவன கானல் நீராகும்
பாலும் பழம் இருந்தும் புசிக்க இயலாது


அருகினிலே இருப்பது போலேன்றாலும் நெருங்க முடியாது
ஆசைபடு அறிந்து கொள் அடைதல் எளிதல்ல தெரிந்துகொள்
ஆதலால் சொல்வேன் தேடு தெளிவடை தேர்வு செய்
அடைவது மட்டும் ஆண்டவன் செயல் அதுவரை காத்திரு

புதன், 19 மார்ச், 2008

போராட்டம்

கருவிலே உருவான குழந்தை உலகை காணும்போதே போராட்டம்
காலப்போக்கில் குழந்தை வளர்ப்பில் தாய்க்கு போராட்டம்
தந்தை என்பவன் தலைவனாதலால் குடும்பமே ஒரு போராட்டம்
தினம் தினம் தோன்றும் திருப்பங்கள் எல்லாம் போராட்டம்

போராட்டம் என்பதே வாழ்க்கையாய் போனதால் பொறுமை தொலைந்து போனது

பொல்லாத கோபம் போக்கிரியாய் உள்ளத்தை கெடுக்கும் போராட்டம் பெருகும்
சொல்லும் வார்த்தைக்கெல்லாம் வெவ்வேறு அர்த்தம் அதனால் அனர்த்தம்
சோதனையாய் உள்ளம் தவித்து போகும் சோகம் கவ்வும்

கடமை ஆற்றுதல் ஒரு தேவை அது ஒரு இலக்கு
காதல் என்பது ஒரு உணர்வு அது ஒரு இலக்கியம்
கடமை மட்டுமே கண்ணாய் காதலை வெறுத்திடுமோ
கண்களாம் அவை ஒன்று போனால் பார்வை என்னாகும்

அன்பு என்பதும் காதல் என்பதும் போராட்டமல்ல
அடங்கி போவதும் அடக்க நினைப்பதும் அல்ல – உணர்வு
ஆறுதல் தேடும் உள்ளங்கள் அகத்திலே அன்பு தேடும்
ஆசைகள் அன்பின் வெளிப்பாடுதானே , பேராசை மட்டுமே பெருநட்டம்

உலக வாழ்க்கை உயிர் இருக்கும் மட்டும் அதற்குள் எத்தனை போராட்டம்
உருவான போதில் தோன்றும் போராட்டம் நீண்ட உறக்கம் வரை தொடரும்

உணவுக்கு ஒரு பக்கம் உரிமைக்கு மறுபக்கம்
பதவிக்கு ஒரு பக்கம் பாழும் பணத்துக்கு மறுபக்கம்

போராட்டமே வாழ்க்கையென்று துவண்டிடாதே பெண்ணே !
பெரும் சோதனை தாங்கிய உள்ளம் துச்சமாக்கும் எதையும்
பொறுமை உனக்கதிகம் புத்திகூர்மையும் உண்டு உண்டு
புத்துணர்வை புதுபொலிவை தொடர்ந்து செல் தோல்வியில்லை !

புரிந்துணர்தல் இருந்து விட்டாலே புல்லும் ஆயுதமாம்
புவியினில் பிறந்த நமக்கும் போராடி வெல்லுதல் தேவைதானே ?
உனக்கு நானும் எனக்கு நீயும் என்றான பின்னே
உறுதியாய் எதையும் எதிர்கொள்வோம் நாமே !