திங்கள், 6 ஆகஸ்ட், 2007

உருவம் இரண்டு நம் உயிர் ஒன்றே

ஒவ்வொரு உறவிலும் ஒவ்வொரு பாடம்
மழை விழும் நிலம் பொறுத்தே நிறம்
பண்பட்ட நிலமதில் விழுந்த விதை விருட்சமாகும்
பசும் சோலை உருவாகும் பறவை கூடும்

களை அகற்றுதல் அவ்வப்போது நடந்தேறும்
களிப்பு அப்போதே மனம் தனில் நிறைவாகும்
கலப்படமில்லா உன் சிரிப்பில் மகிழ்ந்து போகும்
கற்பனை இல்லை நிஜம்தான் நீயும் நானும்

உருவங்கள் சேர்ந்திருத்தல் மட்டுமே வாழ்க்கையில்லை
உணர்வுகள் சேர்ந்திருக்கும் உவகை கொள்ளும்
உன்னை நான் உணர்ந்தாலே தூரம் துச்சமாகும்
உயிர் கலப்புக்கு உடல் தேவை தானோ ?

எத்தனை இன்பம் மடி மீது தலை வைத்து
விடியும் வரை விழித்திருத்தல்
நிலவொளியில் வெட்ட வெளியில் கை கோர்த்து
நடந்து சென்று கடல் மணல் வெளியில்

காலாற நடந்து கை கோத்து காதல்
பெருக்கால் கட்டி அணைத்தல்..நினைத்தாலே இனிக்கும் !

உண்மை அன்புக்கும் உண்மை காதலுக்கும்
உறக்கமில்லை நீ விழித்தால் நான் விழித்து
நீ தும்மினால் நான் உணர்ந்து
நீ சிரித்தால் நானும் சிரித்து
நீ சோகமுற்றால் நானும் சோகமுற்று
தொடாமலே தூரத்தில் இருந்தும்
உணரமுடியும் உன்னதமும் அது தான்