வியாழன், 29 மார்ச், 2007

மனதிலே தோன்றும் மாற்றங்கள் - காதலின் கனவு

வண்ணப் பூக்கள் பூக்கின்ற மனத்தோட்டம்
கற்பனை கனவுகள் நிறைந்த உள்ளம்
வாழ்க்கை பாடங்கள் வரி வரியாய் படித்ததனால்
வெள்ளி உள்ளத்தில் தங்க முலாம் பூசியது

சின்னஞ் சிறு வயதில் சித்திரம் தோன்றவில்லை
சிதைந்த நினைவுகள் தான் சொல்வதற்கில்லை
பட்டாம் பூச்சியாய் திரியும் வயதில்
பாட்டியின் அரவணைப்பே பசுமை உன் மனதில்

உற்றாரும் உறவினரும் உதவி என்பர்
தம்பி உடையான் படைக்கஞ்சார் என்பர்
உடன் பிறப்பெயானாலும் உனக்கென்ன செய்தார்
உருண்டு ஓடிய ஆண்டுகள் காரிருள் போன்றவை

மனதிலே குழப்பம் வார்த்தையில் தெளிவு
திரைப்பாடல் திரைக் கதைகள் சொல்லோவியம்
எல்லாம் நடமாடும் பல்கலை என்பர் நண்பர்
உள்ளத்திலே தொடு வானில் புள்ளியாய் விடிவெள்ளி ?

மனதிலே தோன்றும் மாற்றங்களுக்கு மருந்து
மனித நேயம் கொண்ட நண்பர் சிலரே
புரிந்து கொள்ள நினைத்தும் புதிரே
காரியத்திலே என்றும் கண் கடமை தவறாது

சில நேரங்களில் சில நினைவுகள்
வட்டங்கள் சதுரங்கள் என்று கோடுகள் கூடும்
உள்ளங்கள் உணர்வுகள் உயிர்ப்பது எப்போது
விடை கொடு உன்னை தேடி நான் வருகிறேன் !

திரும்பி பார்க்கிறேன் ..

முதல் பார்வை முதல் காதல்
என்றும் மறப்பதில்லை
சேர்ந்து வாழ்ந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்
ஓடி ஒளிந்த கதை எனக்கு மட்டும் தெரியும்

பூவாய் இருந்த நீ சருகாய் ஆனாயோ
நான் சூட நினைத்த மாலை யார் சூடிப் போனாரோ
எங்கோ தொலை தூரம் மேற்கு கரையோரம்
நீ தொலைந்த நாள் முதலாய் சோர்வுற்றேன்
மனச் சோர்வுற்றேன்

வாழ்க்கைப் பாதையில் தான் எத்தனை மாற்றங்கள்
வில்லும் அம்பும் தான் வெவ்வேறு இடமதிலே
எய்தவள் நீ அழுதபோது சோகம் பாராமல்
அம்பாய் உன்னை அனுப்பி வைத்தாரே ..

இப்போதெல்லாம் கனவுத்தேர் ஏறி ஊர்வலம்
வரும் போதில் அரபிக் கடலோரம்
உன்னை அடிகடி பார்க்கிறேன் ..
உன் விழிகளின் ஓரத்தில் சொல்லவொன்னா சோகமுடன்..

யதார்த்தம் ...

யாதர்த்தமாய் பேசுவதில் கவிஞனுக்கு உடந்தையில்லை.
உள்ளதை உள்ளவாறே பார்க்கும் போது அதில் அத்தனை இன்பமில்லை .
அது வாழ்க்கை கல்வி எனப்படுகிறது .
வாழ்க்கை அனுபவம் என்பது வேறு .
கற்பனை வளம் என்பது வேறு .

தினம் தினம் வாழ்க்கையில் நடப்பதை விட்டு
மற்றவர் கற்பனையில் திளைக்க நாம்
நாவல்களையும் , திரை காவியங்களையும் நாடுவது போல
கற்பனை செய்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது .
குடிசையில் வாழ்பவன் குடிசை பற்றி மட்டுமே
நினைத்திருந்தால் அவனுக்கு வெறுத்துப் போய் விடுகிறது .

நாம் மனதில் என்ன நினைக்கிறோம் .
ஒரு மரங்களடர்ந்த கடற்கரையில் வெறும்
காலுடன் மணல் மேல் நடக்க வேண்டும் என்று
அப்படி நினைக்கும் போதே மானசீகமாக
நமது எண்ணங்கள் அங்கே போய் விடுகின்றன .

இரு அன்பு உள்ளங்கள் பேசும் போது , தங்க முலாம்
பூசிய மேலோட்டமான பேச்சு இருக்க கூடாது .
எனவே நாம் யதார்த்த உலகில் சில
நேரத்திலும் கற்பனை உலகில் சில நேரமும் சஞ்சரித்து வருவோம்
பொய்மை கலந்த எண்ணங்கள் நமக்கு வேண்டாம் நீ கூறியது போல் .